![]() |
எலுமிச்சம்பழத் தொக்கு |
எலுமிச்சம்பழம் - 10,
மிளகாய்த்தூள் - 100 கிராம்,
கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு,
நல்லெண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
எலுமிச்சம்பழத் தொக்கு செய்முறை:
எலுமிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். பிறகு, மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழ விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
