தயிர் இட்லி:
தயிர் இட்லி செய்ய தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்,
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மல்லித்தழை - சிறிதளவு.
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
முந்திரிப்பருப்பு - 6.
தாளிக்க:
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
தயிர் இட்லி செய்முறை:
மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.
அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.
பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி
பரிமாறலாம்.
வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.
இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.
